கொண்டாட்டம் தினம் கொண்டாட்டம் புலம் பெயர்ந்த தமிழனுக்கு நித்தம் நித்தம் கொண்டாட்டம்

 


கொண்டாட்டம் தினம் கொண்டாட்டம்

புலம் பெயர்ந்த தமிழனுக்கு நித்தம் நித்தம் கொண்டாட்டம்

மற்றும் தஞ்சம் புகுந்த இளசுகட்கோ இரவு பகலா ஓயாமல்

இன்ரநெற்றில் பேசுவதில் தீராத கொண்டாட்டம்


வந்து அசுல் அடிச்சு கள்ள வேலை பார்த்து கையில்

இரண்டு பணமும் சேர்த்தால் சில பெரிசுகட்கு கொண்டாட்டம்

பெற்ற பிள்ளைக்கு பல்லு முளைத்தாலும் ஊரை கூட்டி

வைக்கிறாங்க பெரும் விழாவாக கொண்டாட்டம்

பூப்புனித நீராட்டும் இன்று வழமை மாறி இங்கே புதிய முறையில்

கேக்கும் வெட்டி போடுறாங்க ஒரு கொண்டாட்டம்

முதலாவது பிறந்த நாள் விழா கூட பத்து சட்டை மாத்தி இங்கே

பத்து பவுணில் செயினும் போட்டு வைக்கிறாங்க கொண்டாட்டம்

பதினெட்டாவது பிறந்த நாளும் பிள்ளை மைனர் ஆச்சு என்று சொல்லி

ஆடு வெட்டி மாடு வெட்டி போத்தல் உடைச்சு போடுறாங்க கொண்டாட்டம்

கல்யாணம் என்று சொன்னால் மொய் பணம் வரும் என்று காட் அடிச்சு

பவுண் கவரும் வைச்சு பார்த்து பார்த்து கொண்டாட்டம்

கடைசியிலே மனிதன் மண்டையை போட்டா சேர்த்த சொத்து கிடைக்கும்

என்று சொந்தங்கள் போட்டிடுமே கொண்டாட்டம்

கொண்டாட்டம் கொண்டாட்டம் கையில் பணம் இருக்கும் வரை தான்

கொண்டாட்டம்

கொண்டாட்டம் கொண்டாட்டம் உடம்பில் தெம்பும் இளமையும்

இருக்கும் வரை தான் கொண்டாட்டம்

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்