அன்னை தேசம்
சிந்தும் குருதி
அகிலம் எங்கும்
உறைய வைத்தும்
ஈழத் தமிழன்
ஈந்திடும் கண்ணீர்
ஈரம் கண்டும்
இரங்காத உலகம்
சிங்கள வெறியன்
சீண்டிடும் கைகள்
சீறும் படையால்
சிதைந்திடும் காணீர்
எம் நிலம் வந்து
எம்மையே கொல்லும்
துரோகிகள் துரோகம்
தூர்ந்திடும் விரைவில்
தீந்தமிழ் வீரர்
தியாகம் வேள்வி
தன்னிலை மாறி
தமிழீழம் பிறக்கும்...





No comments:
Write comments