ஈழத்தின் குமுறல்கள்

 


இங்கு மழை வானின்று பொழிகின்றது
அங்கு அது கண்ணோரம் பொழிகின்றது
பாட்டு சொல்வார் பின் வீரம் மொழிவார்
தன் பிள்ளை என்றவுடன் நாடு விட்டு நாடு செல்வார்
தாய் நாடு வேண்டுவோராம்..


பொருள் பணமா போராடும்
கொடுத்து விட்டு ஈழம் கேட்பார்
தாய் நாட்டின் தலை நிமிர
தன் மகவின் தலை காட்டார்..

வீரத்தின் வீரம் என
கரும்புலியை மெச்சிடுவார்
வெறும் புலியாய் பாய்ந்திடவும்
வேண்டாம் ஜயா கொஞ்சிடுவார்..

தன் காலம் தான் என்று
பெருமைக்களை அடுக்கிடுவார்
வரும் காலம் அவன் என்றால்
பிள்ளையினை மடக்கிடுவார்...

முன் வீரன் வீழ்ந்தவுடன்
முன்னேற வேண்டாமா
கோழைகள் போல் இங்கே
ஓடிட்டால் முடிந்திடுமா ??

அவர் இருக்க நான் எதற்கு என்பதற்கு
வானின்றா வந்தார்கள் இறப்பதற்கு
நலிந்து விட்ட சில கைகள் நகர வேண்டாமா
அறிவினிலே ஆயுதத்தை கொடுக்கலாமே

இறந்தாலும் சுதந்திரமாய் இறக்க வேண்டாமா ?
பாடையில் படுத்தாலும் நம் நாட்டைப் பார்க்க வேண்டாமா
பிறர் வியர்வை குடித்து வாழ வெட்கமில்லையா
என் நாடு எனதென்ற சொந்தம் இல்லையா..!

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்