நீங்களும் இரவும் நாங்களும்

 
ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பிடிக்க
விரைந்து கொண்டிருக்கும் எங்களை மறித்து
உங்களின் கரங்கள் நீளும்
நிற்போம்
"அண்ணை நானும் வரட்டா?"
என்பீர்கள்
வாயில் வார்த்தை எதுவுமே வராது போவோம்.
ஏதேனும் சிந்தனையில் மூழ்கி நாங்கள்
ஒரு கணம் நிதானம் இழந்து போனால்
"டிம்" இல்லையோடா?
என்று திட்டுவீர்கள்.
சிரிப்பும் கவலையும் சேர்ந்தே வரும்.

பாதுகாப்பாக பீரங்கிகளை நிலைப்படுத்தி
எண்ணியெண்ணி எறிகணை செலுத்திய
காலங்கள் விலகிப்போக
எதிரிகள் ஓடும் வேகத்திற்கேற்ப
எறிகணை செலுத்திகளை நகர்த்தும்
வாகங்களை செலுத்தும் வல்லமை பெற்ற
சகோதரிகளினுடைய சகோதரர்களே,
இரவிலே வாகனங்கள் செலுத்தும் அனைவரும்
ஆண்களாகத்தான் இருப்பார்கள் என்று
எப்படி உறுதியாகத் தீர்மானிக்கிறீர்கள்?
உங்களின் எழுதாத சட்டங்களைத்
தூக்கி எறிந்துவிட்டு
தயவு செய்து கவனியுங்கள்.
நாளைக்கு உங்கள் அக்கா
ஹையேஸ் செலுத்திச் செல்லக்கூடும்
உங்களது கடைசித் தங்கை
பஷனில் பறத்தல் நேரும்
கப்பற் தொகுதிக் கட்டளைத் தளபதியாய்
மருமகள் பிறத்தல் ஆகும்.
தமிழீழத்தில் ஓர் நல்ல விமானியாய்
பெறாமகள் இருத்தல் நிகழும்.
சட்டங்கள் பெற்றாலும் சுதந்திர தமிழீழத்தில்
வேலையில்லா சிக்கலிற்குள்
சிக்காது உங்களது
புதல்வியால் கூட வீதிப் புனரமைப்பில் ஈடுபடும்
கனரகங்களை கன கச்சிதமாய்ச் செலுத்த முடியும்
உருளச் சிரமப்படும் உலகத்தை ஒற்றைக் கையால் உருட்டப்
போகும் உங்களது
பேத்தியின் பெருமை காணும்
பேறு உங்களுக்கு இருத்தல் நல்லது.

எமதருமை உறவுகளே
இனியேனும் வாகனங்களை மறிக்கும் போது
பொதுப்பெயரில் விளித்துதவி கேளுங்கள்.
உறவுப் பெண்களாயிருந்தால் உந்துருளிகளிலும்
ஏனையவர்களானால் ஏனைய வாகனங்களிலும்
இடமிருந்த்தால் நிச்சயம் உதவுவார்கள்

நேற்றும் இன்றும் நாளையும்
ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது என்பதுடன்
இது
சூரியனின் புதல்விகள் உலவும் தேசம்

மாறாதா விதி

 
விதியோ... வேளையோ
வேற்று நாடுகளில்
அகதிப் பதிவுகளோடு நாம்.
சொர்க்கம்தான்
சொந்தம் இல்லை.
இரத்தக் கறை
குறைந்தபாடாயில்லை
இலங்கைப் படத்தின்
விளிம்புகளில்.

சோமாலியாவை விட
கேவலமாய்
எம் வருங்காலச்
சந்ததிகள்.
களையிழந்து
கல்வியிழந்து...
பேரினவாதிகளின்
புதைகுழிகளுக்குள்
மனச்சாட்சியும்
மனிதாபிமானமும்
புதைந்தபடி.

தலையில்லா முண்டங்களும்
தாய் தந்தையில்லா
குழந்தைகளுமாய்
வரங்களும்
சாபங்களும்
பெற்ற
சபிக்கப்பட்ட
இனமாய்
தமிழ் இனம்
இலங்கத் தீவில்.

வாழ்வின்
அத்தனை ஆசைகளும்
அடக்கி ஒடுக்கப்பட்டு
கண் முன்னே
கடத்தப்பட்ட
நிலையில்
வேற்று நாடுகளில்
அகதிப் பதிவுகளோடு
நாம்!!!!!!!!

நான்....!!

 
எனக்கு பசி தாகம் மோகம்
உடனே உடனே
ஒரேயடியாய் தீர்க்க
ஓரிடம் வேண்டும்
இரத்தம் சதை
இன்னும்பிற
என்பற்கள் நற நறக்க
கண்கள் சிவசிக்க
உடல்கொதி கொதிக்க
வீதியில் இறங்கி
விறு விறுவென
நுழைந்தேன்
யாழ் வைத்தியசாலை
நாசிகள் கூட
நாசம்பண்ணியதில்லையாமே
நான்செய்துபார்த்தாலென்ன
நுழைந்தேன்
நேயாளிகள்வரிசையாய்
நொய்ந்துபோய் சே
நோய்தான் வந்துவிட்டதே
இனி இருந்தென்ன
இறந்தென்ன -என்
இயந்திர துப்பாக்கி
இயங்கியது
ஓ....வென ஒரு ஓலம்
ஓடிவந்தனர் தாதியர்
வெள்ளையுடையில்
என்மனதோ கறுப்பானது
என்ன கவிஞர்
எழுதி குவிக்கின்றனர்
பெண்கள் முகத்தையும்
மார்பகத்தையும்
என்னைபோல் மெதுவாய்
கத்திகொண்டு
சிறிது சிறிதாய்
மெல்ல மெல்ல
கீறி குத்தி
வழியும் குருதியை
வாஞ்சையுடன்
ரசித்து ருசித்து
கையை உடைத்து
காலை முறித்து
கழுத்தையறுத்து- என்
வீரத்தையும்
மயங்கிகிடந்த
மங்கையர்மீது-என்
வீரியத்தையும்
மீண்டும் மீண்டும்
மீழ்பரிசீலனை
செய்துகொண்டெழுந்தபோது
எங்கேயோ ஓரு
குழந்தையின்
குவா குவா
கூக்குரல்....
குழந்தையொன்று
குறைகூறுவதா-என்வீரத்தை
செல்லமாய்தூக்கி
சுற்றி
சுவரில்ஓரடி
சுவரெங்கும்சித்திரமாய்
இரத்தம்
எதிரே இன்னும்சிலர்
இறைவனுக்கடுத்ததாய்
எல்லோரும்
இவர்களைத்தான்
வணங்குவார்களாமே??
பாவம்
பைத்தியகார வைத்தியர்கள்
எல்லேரும் என்னை வணங்கியபடி
வெடிகுண்டொன்றை வீசி
ஆசீர்வதித்துவிட்டு
வெளியேவந்து
ஆசுவாசமாய்
பீடி ஒன்றை உருவி
பற்றவைத்து
புகையை
இழுத்துவிட்டேன்
இந்த தேசத்துமக்களின்
ஓலங்களைபோலவே
பீடி புகையும்
காற்றில் கரைந்து
காணாமல்போனது
இப்போ
புரிந்திருக்கும்உங்களிற்கு
நான் யாரென்று
காந்தி தேசத்தின்
காவலன்
ஜெய் கிந்...................

நீ....?

 
அன்றொரு நாள்
ஆகாயத்திலிருந்து
அரிசியும் மண்ணெண்ணெயும்
ஆகா வந்துவிட்டார்கள்

சாதிவெறி இன்னும் தீரவில்லை

 
சாதிவெறி இன்னும்
சத்தியமாய் தீரவில்லை
எங்கள் தமிழ் போராட்டமும்
அவ்வெறியை தீர்க்கவில்லை
பலநூறு மைல்கள்
பறந்து வந்தும் ஐயையோ
பார்கின்றோமே
சாதியது இங்குமல்லோ

ஆதியிலே சாதியில்லை
பாதியிலே வந்ததென்று
சேதியாகச் சொல்லுறாங்க
ஓதியே வைச்சாங்க
மோதித்தான் சாகிறாங்க
கோதித்ததான் பார்க்கிறாங்க
மீதியாய் ஒன்றும் இல்லை
சாதியால் அழிவுதாங்க.

பார்பனரோ கொண்டு வந்தார்
ஏற்பவரோ ஏற்றி விட்டார்
தீர்ப்பவரோ இன்று இங்கு
திண்டாட்டப் படுறாங்க
மோர்மிளகாய் செய்து தந்தால்
முட்டி மோதித் தின்னுவாங்க
ஊர்காரர் உள்ளே வந்தால்
எட்ட நில்லு என்கிறாங்க

சாதியில்லை என்று தான்
அம்பேத்கர் சொன்னாங்க
வாதியாக பெரியாரும்
அதைத்தானே சொன்னாங்க
நாதியாக்கி ஒளவையாரும்
பெண்சாதி ஆண்சாதின்னு
ஓதியே சொன்னாங்க
அதுவும் தெரியவில்லை

உண்மை நிலை புரியவில்லை
உயர்சாதி என்றாங்க
பண்ணும் நிலை பாவம் நீங்க
கோயிலுக்குள் போறாங்க
உண்ணும் உணவிலேயும்
சாதிதான் சொல்லுறாங்க
எண்ணும் நிலை என்றும் இல்லை
விண்ணாடம்தான் பேசுறாங்க

அவன் எங்கள் குடிமகனாம்
நான் உடையார் பரம்பரைதான்
இவன் அந்தப் பக்கமாம்
அவன் கரையோரப்பக்கமாம்
தான் அடிமை வேலைதானே
கழிவறைகள் கழுவினாலும்
நான் பெரிய சாதி என்று
செய்யும் தொழில் மறைக்கிறாங்க

ஈழச்சண்டை வந்த போது
சாதிச்சண்டை போனதென்றார்
சூழச் சண்டை இல்லை என்றார்
சாதிவெறி அகன்றதென்றார்
வீழாச்சாதி நெறி என்றே ஓதுறாங்க
பாதிதானும் போகலைங்க
வாழச் சாதி பேதங்கள்
சற்றியே வைக்கிறாங்க

புலம் பெயர்ந்து வந்துட்டாக
நலம் பார்த்து திரிகிறாங்க
குலம் வேறு என்கிறாங்க
குடீபோதை கொள்கிறாங்க
வலம் வந்தே கலியாணம்
சாதியாலே பேசுறாங்க
கலம் நிறையச் சீதனமும்
பலமாக வாங்குறாங்க

வந்திருந்த இடத்தினிலே
பிறந்து வந்த பிள்ளைகட்கு
சிந்திக்காச் சாதியேல்லாம்
உந்திக்கக் சொல்லுறாங்க
பந்தியிலே சாதிப்பெயர்
பத்திரமாய் ஊட்டுறாங்க
முந்தி நின்று கழிவறையை
இரவு பகல் கழுவுறாங்க

கடையினிலே சிப்பந்தி
நடையினிலே கால் நடையாய்
உடையினிலே கேவலமாய்
பார்தலே பரிதாபம்
சடையினிலே பேன் வழியும்
மூக்கிலே சளிமூட்டம்
வாடையிலே அசிங்கம் தான்
பெயர் மட்டும் பெரிய சாதி தான்

தரகர் வேலை தரத்தாங்க
சாதிவேற பார்க்கிறாங்க
ஊர்பேர் எல்லாங் கேட்பாங்க
படிக்காத மாப்பிள்ளைக்கு
காரோடு பொம்பிளைங்க
திமிராக வேண்டுவாங்க
பேரேடு கேட்பானுகங்க
வேறோடு விசாரிப்பாங்க

கறுப்பினம் வெள்ளையினம்
சாதியேதும் பார்க்காதுங்க
நிறத்தை விட சாதி என்னன்பாங்க
இணைத்தும் கூட நிற்பாங்க
மறுத்து விட முடியாமல்
அவன் பிள்ளை வாளர்ப்பாங்க
குறு குறுத்து திரிவாங்க
மெளனம் கொண்டு இருப்பாங்க

பேதி குடித்தவராய் அலைகிறாங்க
சாதி மான்கள் தானுங்க
ஓதி இருந்த பிள்ளை மாற்றினதில்
கல்யாணம் பண்ணிட்டாங்க
சேதி சொன்னால் வெட்கம் என்று
நாதியற்று உறைந்தாருங்க
மோதி முட்டி மனைவியிடம்
அடங்கி ஒடங்கி விட்டானுங்க

ஐயையோ அநியாயம்
என்றே உளறுகின்றார்
பொய்யையோ என் பிள்ளை
நடக்காது என்கின்றார்
மெய்யாகத் தன்பிள்ளை
கலப்பு கலியாணம்
செய்ததையே ஏற்காது
நிலவுக்கா ஓடப்போறானுங்க

மான்பதையே மாறவில்லை
மனித குலம் வளரவில்லை
என்பதையே சொல்லிடலாம்
தமிழன் மானம் சாதியில் தான்
தன்வினையால் தவிக்கிறது
இங்கு உள்ளோன் வளர்வதற்க்கு
பன்மையில் சாதியில்லா
பக்குவமே உணர்வானோ நம் தமிழன்.

தீருமா யுத்தம்

வானத்தில் நட்சத்திரங்களை எண்ணிய − நாம்
இன்று யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்குண்டு
உயிர் மடிந்த பச்சிளம் குழந்தைகளினது
உடல்களை எண்ணுகையில் ஆயிரம் மலைகளை

உயிர்ப் பூக்கள்

 
தமிழீழம் மலர்ந்து
தன் மானத்துடன் வாழவே
தானத் தலைவன்
தரணியில் அமைத்தான் புலிப்படை
எம் இனத்தை வதை செய்த
பாதகரைத் திவசம் செய்ய
தலைவன் வழியினில் உதித்த
உயிர்ப் பூக்கள் நீங்கள்.

வானத்திலிருந்து விமானங்கள்
குண்டு மழை பொழிந்தாலும்
அந்நியப் படைகள்
ஆயிர மாயிரமாய் வந்தாலும்
சிரிக்கின்ற முகத்துடன்
சிட்டாகப் பறந்து சென்று
தேடிவந்த பகை விரட்டியடித்து
பூரித்து நிற்பதே
உங்களின் இலக்கு

பார் முழுவதும் வியக்கும்
படைப் பலத்தைப் பெற்றீர்கள்
களத்தினில் எதிரிகளைக் கொன்று
காலனை உம்மிடம் அழைத்தீர்கள்
உங்கள் குருதி
உறைந்த தமிழ்மண்ணை
உயிராய் நேசிப்போம்
தமிழ் உயிர்ப் பூக்கள் என்றும்
எம் இதயத்தில் பூத்துக்குலுங்கும்.

உயிர்ப்பூக்களின் பாதம்
படிந்த தேசம்
இன்று போர்மேகம்
அகன்று நின்றாலும்
அதிகார சிங்கள
ஆட்சியாளர்களே ! இனியும்
உமக்காய்ப் பனிவோமென
ஓரு போதும் நினைக்காதே
பல்லாயிரம் உயிர்ப் பூக்களின்
பாதம் தொழுது
வேங்கையாப் பாய்வோம்
தமிழ் மண்ணின் விடியலுக்காய்.

தமிழினம்


பலகாலம் வதைபட்டு
சிங்கள இனவெறியரால்
எமதினம் சிதைபட்டு
திட்டமிட்டு அழிபடும் வேளையிலே

விடியும் வரை

அதிகம்

தேடல்