புல தமிழா!!!!

 


புல தமிழா!!!!
உன் இருப்புக்கு ,இயங்கிகளுக்கும்
உனக்கு தேவை


சிங்க கொடி துடுபாட்டமும்
சிவஜியின் நாயகன் ரஜனியும்
சின்ன திரை மெகாசீரியலும்

சிங்க கொடி பகிஷ்கரிக்க கோரின்
சீ-விளையாட்டு வேறு அரசியல் வேறு என
சிந்தாந்தம் பேசுகிறாய்

சிவாஜி பகிஷ்கரிக்க கோரின்
சினிமா வேறு அரசியல் வேறு என
சீற்றம் கொள்கிறாய்.......


சின்ன திரை வேண்டாம் எனின்
சீரியல் இல்லை எனின்
சீவியம் என்கிறாய்

முடியவில்லை உன்னால்
உறவுகளின் இருப்புக்கும் இயங்கிகளுக்கும்
உன் பொழுதுபோக்கை
இழக்க தயார் இல்லை.................

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்