திலீபனின் தமிழீழம் தடுக்க முடியாத ஓர் பிரசவம்....

 

தியாகத்தின் திரி கருகி
மயானத்தில் நீதி புதைந்த நாள் இன்று
கண்ணீரில் ஊறிய கண்கள்
கார் முகிலால் மூடிய நெஞ்சம்
வெம்பி வெம்பி வீங்கிய
வெடிக்காத இதயத்தின் விளிம்புகள்


போர் ஓய்ந்த பின்னும்
பெறுகின்ற அமைதியின் அமுக்கம்
ஓ….. என அழ எண்ணும் பொழுதும் - நீ
நெஞ்சுரம் தந்த பாடம் தடுக்கிறது

பேரலையிலும் கலங்காத மனம் -உன் துயரில்
அகிம்சை விதையில் ஆளமாகப் புதையுண்டு
விழித்தெழும் வித்தாக முளை
முனை உடைக்கிறது

குற்றுயிரில் வாடும் நீதியைக் காக்க – நீ
குவளையிலே நீர் கொடுத்தாய்
குருதியில் வேள்வி காணும் கயவரிற்க்கு-உன்
குறிக்கோள் பகலிலே
உடுக்கையின் ஒளியாயிற்றோ

வெள்ளைக் கொடி பறக்க நீ எடுத்த முயற்சி – உன் உடலின்
இறுதிப் பயணத்தின் போர்வையானதோ
மரணித்தது உன் உடல் மட்டும்தானே
அதனால்தான் உன் நோக்கம்
பல சேவைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது

பாரதத் தாய் புனிதமாய் எண்ணும் - அகிம்சை
உனக்கு மாத்திரம்
ஏன் பாடையிலே போகும் வரை மௌனமாயிற்று
பள்ளம் பார்த்து ஓடுகின்ற வெள்ளம் இவர்கள் - உன்
கொள்கையின் வலிமையை
உரசிப்பார்க்க முடியாத மடையர்கள்

உன் மறைவு எமக்கு உண்மையான
உண்மையைப் பிறப்பித்துத் தந்;து போயிருக்கிறது
உனது மறைவினால் ஓர் புதுயுகம்
ஒளி பெற்றிருக்கிறது
உன் எணண்த்தில் உதித்த தமிழீழம் - யாராலும்
தடுக்க முடியாத ஓர் பிரசவம்.

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்