ஓயும் அலையா புலிகளின் அலைகள் பாடல் வரிகள்

 

 ஓயும் அலையா புலிகளின் அலைகள்

பாயும் புலிகள் வெல்வாரடா

ஓயும் அலையா புலிகளின் அலைகள்

பாயும் புலிகள் வெல்வாரடா


சேயும் கூடக் களத்திலாடி

வீரராகி வெல்வாரடா

சேயும் கூடக் களத்திலாடி

வீரராகி வெல்வாரடா


ஓயும் அலையா புலிகளின் அலைகள்

பாயும் புலிகள் வெல்வாரடா

ஓயும் அலையா புலிகளின் அலைகள்

பாயும் புலிகள் வெல்வாரடா


முல்லை நகரினில் முதுகினை உடைத்துமே

எல்லை மீறிடும் நினைவுமுண்டோ

வேவு பார்த்திட வரிப்புலி வருவார்

தாவும் புலிகள் மறவன்றோ


முல்லை நகரினில் முதுகினை உடைத்துமே

எல்லை மீறிடும் நினைவுமுண்டோ

வேவு பார்த்திட வரிப்புலி வருவார்

தாவும் புலிகள் மறவன்றோ


உயிரிலே கலந்தவர்

உணர்விலே நிறைந்தவர்

ஓதிடும் வேதத்தில்

உள்நின்று ஒளிர்பவர்


மோதிடும் கரும்புலி வெடித்திட சிதறிட

சாய்ந்திடும் எதிரிகள் கோட்டைகள் உடைத்திட

பாய்ந்திடும் புலியிது மண்ணினை மீட்டிடுமே


வாட்டிடும் துன்பங்கள் நாட்டினை கடந்திட

கோட்டிடும் எல்லைகள் விடுதலை நிலைத்திட

ஓய்ந்திடும் எதிரிகள் ஆணவம் அடங்கிடுமே


ஓயும் அலையா புலிகளின் அலைகள்

பாயும் புலிகள் வெல்வாரடா

ஓயும் அலையா புலிகளின் அலைகள்

பாயும் புலிகள் வெல்வாரடா


வன்னி மண்ணினில் படைகளைக் குவிப்பதால்

கன்னி தமிழினம் கலங்கிடுமோ

எண்ணித் துணிந்தது தமிழர்கள் படையே

விண்ணில் பறந்திடும் புலிக்கொடியே


வன்னி மண்ணினில் படைகளைக் குவிப்பதால்

கன்னி தமிழினம் கலங்கிடுமோ

எண்ணித் துணிந்தது தமிழர்கள் படையே

விண்ணில் பறந்திடும் புலிக்கொடியே


தமிழரை அழிப்பது

தரணியில் முடியுமா

தர்மத்தின் வாசலில்

தருக்கர்கள் பாதமா


போரது முடிவுறும் பாரது போற்றிடும்

வேரது உயிர்பெறும் விழுதுகள் பலஎழும்

வேங்கைகள் சேனைகள் எல்லையை காத்திடுமே


தலைவனின் மந்திரம் தரணியில் பரவிடும்

தலைவிதி மாறிடும் தமிழது உயிர்பெறும்

தாயக பூமியில் தர்மங்கள் நிலைத்திடுமே


ஓயும் அலையா புலிகளின் அலைகள்

பாயும் புலிகள் வெல்வாரடா

ஓயும் அலையா புலிகளின் அலைகள்

பாயும் புலிகள் வெல்வாரடா


சேயும் கூடக் களத்திலாடி

வீரராகி வெல்வாரடா


ஓயும் அலையா புலிகளின் அலைகள்

பாயும் புலிகள் வெல்வாரடா

ஓயும் அலையா புலிகளின் அலைகள்

பாயும் புலிகள் வெல்வாரடா

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்