சாதிவெறி இன்னும்
சத்தியமாய் தீரவில்லை
எங்கள் தமிழ் போராட்டமும்
அவ்வெறியை தீர்க்கவில்லை
பலநூறு மைல்கள்
பறந்து வந்தும் ஐயையோ
பார்கின்றோமே
சாதியது இங்குமல்லோ
ஆதியிலே சாதியில்லை
பாதியிலே வந்ததென்று
சேதியாகச் சொல்லுறாங்க
ஓதியே வைச்சாங்க
மோதித்தான் சாகிறாங்க
கோதித்ததான் பார்க்கிறாங்க
மீதியாய் ஒன்றும் இல்லை
சாதியால் அழிவுதாங்க.
பார்பனரோ கொண்டு வந்தார்
ஏற்பவரோ ஏற்றி விட்டார்
தீர்ப்பவரோ இன்று இங்கு
திண்டாட்டப் படுறாங்க
மோர்மிளகாய் செய்து தந்தால்
முட்டி மோதித் தின்னுவாங்க
ஊர்காரர் உள்ளே வந்தால்
எட்ட நில்லு என்கிறாங்க
சாதியில்லை என்று தான்
அம்பேத்கர் சொன்னாங்க
வாதியாக பெரியாரும்
அதைத்தானே சொன்னாங்க
நாதியாக்கி ஒளவையாரும்
பெண்சாதி ஆண்சாதின்னு
ஓதியே சொன்னாங்க
அதுவும் தெரியவில்லை
உண்மை நிலை புரியவில்லை
உயர்சாதி என்றாங்க
பண்ணும் நிலை பாவம் நீங்க
கோயிலுக்குள் போறாங்க
உண்ணும் உணவிலேயும்
சாதிதான் சொல்லுறாங்க
எண்ணும் நிலை என்றும் இல்லை
விண்ணாடம்தான் பேசுறாங்க
அவன் எங்கள் குடிமகனாம்
நான் உடையார் பரம்பரைதான்
இவன் அந்தப் பக்கமாம்
அவன் கரையோரப்பக்கமாம்
தான் அடிமை வேலைதானே
கழிவறைகள் கழுவினாலும்
நான் பெரிய சாதி என்று
செய்யும் தொழில் மறைக்கிறாங்க
ஈழச்சண்டை வந்த போது
சாதிச்சண்டை போனதென்றார்
சூழச் சண்டை இல்லை என்றார்
சாதிவெறி அகன்றதென்றார்
வீழாச்சாதி நெறி என்றே ஓதுறாங்க
பாதிதானும் போகலைங்க
வாழச் சாதி பேதங்கள்
சற்றியே வைக்கிறாங்க
புலம் பெயர்ந்து வந்துட்டாக
நலம் பார்த்து திரிகிறாங்க
குலம் வேறு என்கிறாங்க
குடீபோதை கொள்கிறாங்க
வலம் வந்தே கலியாணம்
சாதியாலே பேசுறாங்க
கலம் நிறையச் சீதனமும்
பலமாக வாங்குறாங்க
வந்திருந்த இடத்தினிலே
பிறந்து வந்த பிள்ளைகட்கு
சிந்திக்காச் சாதியேல்லாம்
உந்திக்கக் சொல்லுறாங்க
பந்தியிலே சாதிப்பெயர்
பத்திரமாய் ஊட்டுறாங்க
முந்தி நின்று கழிவறையை
இரவு பகல் கழுவுறாங்க
கடையினிலே சிப்பந்தி
நடையினிலே கால் நடையாய்
உடையினிலே கேவலமாய்
பார்தலே பரிதாபம்
சடையினிலே பேன் வழியும்
மூக்கிலே சளிமூட்டம்
வாடையிலே அசிங்கம் தான்
பெயர் மட்டும் பெரிய சாதி தான்
தரகர் வேலை தரத்தாங்க
சாதிவேற பார்க்கிறாங்க
ஊர்பேர் எல்லாங் கேட்பாங்க
படிக்காத மாப்பிள்ளைக்கு
காரோடு பொம்பிளைங்க
திமிராக வேண்டுவாங்க
பேரேடு கேட்பானுகங்க
வேறோடு விசாரிப்பாங்க
கறுப்பினம் வெள்ளையினம்
சாதியேதும் பார்க்காதுங்க
நிறத்தை விட சாதி என்னன்பாங்க
இணைத்தும் கூட நிற்பாங்க
மறுத்து விட முடியாமல்
அவன் பிள்ளை வாளர்ப்பாங்க
குறு குறுத்து திரிவாங்க
மெளனம் கொண்டு இருப்பாங்க
பேதி குடித்தவராய் அலைகிறாங்க
சாதி மான்கள் தானுங்க
ஓதி இருந்த பிள்ளை மாற்றினதில்
கல்யாணம் பண்ணிட்டாங்க
சேதி சொன்னால் வெட்கம் என்று
நாதியற்று உறைந்தாருங்க
மோதி முட்டி மனைவியிடம்
அடங்கி ஒடங்கி விட்டானுங்க
ஐயையோ அநியாயம்
என்றே உளறுகின்றார்
பொய்யையோ என் பிள்ளை
நடக்காது என்கின்றார்
மெய்யாகத் தன்பிள்ளை
கலப்பு கலியாணம்
செய்ததையே ஏற்காது
நிலவுக்கா ஓடப்போறானுங்க
மான்பதையே மாறவில்லை
மனித குலம் வளரவில்லை
என்பதையே சொல்லிடலாம்
தமிழன் மானம் சாதியில் தான்
தன்வினையால் தவிக்கிறது
இங்கு உள்ளோன் வளர்வதற்க்கு
பன்மையில் சாதியில்லா
பக்குவமே உணர்வானோ நம் தமிழன்.
No comments:
Write comments