காசி ஆனந்தன்
கோடித் தடந்தோளாம்! அங்கே
குன்றமொரு குவையாம்!
ஆடி வருங் கடல்கள் - களத்தில்
ஆயிரம் ஆயிரமாம்!
விழியும் நெருப்பு மொன்றே! - மறவர்
விரைவும் புயலுமொன்றே!
மொழியும் இடியுமொன்றே! - வெம்போர்
முனையை எதுமொழிவேன்?
உள்ளம் மலைக்குவமை! - அங்கே
உடல்கள் புலிக்குவமை!
வெள்ளம் படைக்குவமை! - மறவர்
வெறிக்கும் உவமையுண்டோ?
மெய்கள் சிலிர்த்திடவே - வீரம்
மிளிர்ந்த களப்புறத்தில்...
ஐயோ! ஒரு நொடியில் - நிகழ்ந்த
அழிவை எதுபுகல்வேன்?
கூனல் விதிக்கிழவி - பாவி
கொடுமை இழைத்தனளோ?
மான மறத்தமிழன் - அடடா
மதியை இழந்தனனோ?
என்ன மொழி யுரைப்பேன்? - இந்த
இழிவின் நிலை சிறிதோ?
தென்னர் படைக்குவியல் - களத்தே
சிதைந்து குலைந்ததடா!
பார்ப்பான் மிகவுயர்ந்தோன்...- அவனே
படையை நடத்திடுதல்
சேர்க்கும் பெருமையென்றான் - ஒருவன்
சின்னச் செயல் புரிந்தான்!
ஓங்கி வளர்ந்த மரம் - காற்றில்
உடைந்து விழுந்தது போல்
ஆங்கு தமிழ்மறவர் - நூறாய்
ஆனார் நொடியினிலே!
ஆதிப் புகழுடையோர் - உழவர்
என்றார் சிலர் அடித்தே!
சாதிக் கொடுமையடா! - இதுதான்
சனியன் எனும் பொருளோ?
செம்படவன் குதிப்பான்! - ஆங்கே
செட்டி செருக்குரைப்பான்!
கும்பம் சரிந்ததுபோல்.... தமிழர்
கூட்டம் சிதைந்தடா!
கண்கள் அனல் சுழற்ற - நெஞ்சம்
காய்ந்து சருகுபட
விண்ணில் இடிசிதற - நானோ
வேதம் முழக்குகின்றேன்.
குழப்பம்
About Eelam
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.
அதிகம்
-
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு கடல் சூழ்ந்த யாழ்பாணம் படகு போல் இருக்கும்! கரை மணலில் நண்டு ஏதே...
-
தமிழே! உயிரே! வணக்கம்! தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்! அமிழ்தே! நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்! தமிழே!...
-
என்னடா தோழா செருக்களமா? அட எங்கேயடா? எனக் கூவி சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை துள்ளி அவாவுடன் தாவி என்னிரு கண்கள் எதிரினிலே தொலை இடத...
-
தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும் செங்கரும்பைப் பிழிந்தும் ஆநெய் கறுவாஏலம் கலந்தும் அமுதாய்த் தமிழ்ப் புலவன் ஊனை உயிரை உருக்கும் தமி...
-
முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்! நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன! காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்! தேய்ந்த வீரம் திரும்பி வந்தது! நி...
-
முடியோடு முன்னாளில் மூவேந்தர் புகழோடு முரசி னோடு கொடியோடு மாற்றார்முன் குனியாத மார்போடு கொற்றத் தோடு படையோடு தனியான பண்போடு பிறநாடு...
-
(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்...
-
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! தலைமீது சுமக்கின்றான் அடிமை என்னும் சொல்லை! தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! எதிரியைத் தலைவனாய் எண்ணுக...




No comments:
Write comments