எச்சரிக்கை

 


துன்பம் மனித வாழ்வில் ஓர் பக்கம்
துன்பம் ஈழத்தமிழன் வாழ்வின் முழுப்பக்கம்
அன்னையை அழிப்பினும்
வேட்டுக்கள் தாலாட்ட வளர்ந்திவோம்

பள்ளிக்கு குண்டு போட்டினும்
பதுங்கு குழியில்ப் படித்திடுவோம்
பட்டினி நீர் போட்டினும்
பசியுடனே படித்திடுவோம்
குண்டு நீர் போட்டினும்
குப்பி விளக்கில் படித்திடுவோம்
புத்தகம் நீர் அனுப்பாவிடினும்
நம் தமிழ்ப் பண்டிதரிடம் படித்திடுவோம்
வெட்டுப் புள்ளி அதிகரிப்பினும்
வீறுடனே படித்திடுவோம்
வேலை வாய்ப்பு அளிக்கா விட்டால்
வேளாண்மையுடன் பிழைத்திடுவோம்
மலையே நீர் போட்டாலும்
மாய்ந்து நாம் மடிய மாட்டோம்.

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்